கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
09 ஜூலை, நெல்லை நியூஸ் தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தம்; ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகளில் பொறியியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் முதல் உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோளாறின் தன்மை…
