Headlines
பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையான பராமரிப்பும், போதிய ஆசிரியர் நியமனமும் இன்றி அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையேயும் முன்னாள் மாணவர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள், சிறந்த ஆசிரியர்கள் எனப் பல துறை சாதனையாளர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர், பள்ளிக்கு நிலையான தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது பொறுப்புத் தலைமை ஆசிரியரே அனைத்துப் பணிகளையும்…

Read More
பழனியில் விசிக மாநில செயலாளர் தலைமையில் பெரியார் சிலை ஆய்வு..

பழனியில் விசிக மாநில செயலாளர் தலைமையில் பெரியார் சிலை ஆய்வு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடிச்சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை கைப்பிடிகள் சேதம் அடைந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணனிடம் உதவி கோரிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்று சிலையை ஆய்வு செய்தார். உடனடியாக சிலைக்கு மாலை அணிவிக்கும் செல்லும் படியின் கைப்பிடிகள் மற்றும் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் டைல்ஸ் கற்கள் அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

தமிழக அரசு ஆவணங்களில் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதாளத்திற்குச் சென்று கடும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற இயற்கை வளங்கள் அழிப்பு, கனிம வளக் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் கொள்கைகளே மாவட்டத்தின் இன்றைய வறட்சி நிலைக்கு முதன்மையான காரணங்கள் என்று இயற்கை சார்ந்த சமூக ஆர்வலர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல் (CPIML)…

Read More
ஒட்டன்சத்திரம் அருகே நீரோடையை அடைத்து சட்டவிரோதமாக பாதை அமைப்பு - தனியார் காற்றாலை நிறுவனம் மீது புகார்!

ஒட்டன்சத்திரம் அருகே நீரோடையை அடைத்து சட்டவிரோதமாக பாதை அமைப்பு – தனியார் காற்றாலை நிறுவனம் மீது புகார்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் – பழனி நான்கு வழிச்சாலையில், மழைநீர் செல்லும் முக்கிய நீரோடையை தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று மண் கொட்டி முற்றிலுமாக அடைத்து, சட்டவிரோதமாக பாதை அமைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் பகுதியில் பழனி செல்லும் நான்கு வழிச்சாலையின் தென்புறம் அமைந்துள்ள நீரோடை, அப்பகுதியின் முக்கிய மழைநீர் வடிகாலாக உள்ளது. இந்த நீரோடையை தனியார் காற்றாலை நிறுவனம் மண் கொட்டி அடைத்து, கனரக வாகனங்கள் செல்ல பாதை…

Read More
நாகர்கோவிலில் அரசு உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

நாகர்கோவிலில் அரசு உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

நாகர்கோவில், செப். 08: தங்களது மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தக் கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சுமார் 130 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை காவலில் எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையான ரூ.1,500 தொடர்ந்து சரிவர வழங்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திற்கு இணையான வகையில் தங்களின் உதவித்தொகையை ரூ.6,000…

Read More
வெள்ளி ஒளியில் மிளிரும் பழனி சிவன் சன்னதி: 88.9 கிலோ வெள்ளித் தகடு பொருத்தும் பணி துவக்கம்!

வெள்ளி ஒளியில் மிளிரும் பழனி சிவன் சன்னதி: 88.9 கிலோ வெள்ளித் தகடு பொருத்தும் பணி துவக்கம்!

பழனி : செப்டம்பர் 08, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள சிவன் சன்னதி, தற்போது வெள்ளி ஒளியில் ஜொலிக்கத் தயாராகி வருகிறது. பழனி சிவன் சன்னதியில் 89 கிலோ வெள்ளித் தகடுகள்: ஒரே குடும்பத்தின் நெகிழ்ச்சியான நன்கொடை! பழனி மலைக்கோயில் மகாமண்டபத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சிவன் சன்னதியில் சுமார் 89 கிலோ அளவில் வெள்ளித் தகடுகள் பதிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (ரமேஷ்) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைத்…

Read More
பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்

பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்

பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்துவதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விக்னேஷ் வருகை தந்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், நகரச் செயலாளர்…

Read More
தென்காசியில் நடந்த 23-வது மாநில வூஷூ போட்டியில் தங்கம் வென்றார் Rightway பள்ளி மாணவர்!

தென்காசியில் நடந்த 23-வது மாநில வூஷூ போட்டியில் தங்கம் வென்றார் Rightway பள்ளி மாணவர்!

தென்காசியில் 23-வது மாநில அளவிலான * (Wushu) போட்டி* நடைபெற்றது. இதில் 60 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட, மதுரை அவனியாபுரம் Rightway Islamic Matriculation School-ன் 10-ம் வகுப்பு மாணவர் முஹம்மது ஸாலிஹ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் தேசிய அளவிலான வூஷூ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர் ஜஹாங்கீர்,பொருளாளர் சையத் அபுதாஹிர்,…

Read More
சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை:சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்தவித குளறுபடிகளுக்கும் இடம் தராமல் துல்லியமாக நடத்தப்பட வேண்டும் என்றும், ஓபிசி (OBC) மக்களின் சமூகநீதி உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:​தற்போது நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல், நேரடியாக அவர்கள் கூறும்…

Read More
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செப்டம்பர் 12 முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செப்டம்பர் 12 முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. ​ரோப்கார் இயக்கம் தொடர்பான அனைத்து இயந்திரங்களும் NDT பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ரோப்கார் இயக்கத்திற்கான சாஃப்ட் பழுது கண்டறியப்பட்டு, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய சாஃப்ட் கொல்கத்தாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை NDT பரிசோதனை செய்யும் பணியும்,…

Read More