இதழ்கள்
நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் வெள்ளை ஸ்விப்ட் காரின் அட்டூழியம்..!
செப் 22 கன்னியாகுமரி – நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி இன்று மாலை 3 மணியளவில் சென்ற கேரளா அரசு பேருந்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. TN75BC 0833 என்ற எண் கொண்ட வெள்ளை நிற ஸ்விப்ட் கார், பேருந்தின் முன்னே மிக மெதுவாக ஓட்டி, ஓவர்டேக் செய்ய முயன்றதும் நடுரோட்டில் பாய்ந்து முன்பாக வந்து பிரேக் அடித்து அச்சுறுத்தியது. பார்வதிபுரம் முதல் தோட்டியோடு வரையிலான பயணத்தில், பேருந்து ஓட்டுனருக்கும் உள்ளே பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் பெரும்…
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்…
செப் 22, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசு தனது 313வது வாக்குறுதியான “அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்” என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து இந்நிகழ்வு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும், மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க…
பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருநெல்வேலி-யில் ஆர்ப்பாட்டம் நடத்திய, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்..!
திருநெல்வேலி, செப்.22:-தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று (செப்டம்பர். 22) மாலையில், திருநெல்வேலியில் கோரிக்கை முழக்க, மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. * 50 ஆண்டு கால பொன்விழா கண்ட, அங்கன்வாடி ஊழியர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்! * * * குறைந்தபட்ச ஓய்வூதியமாக,ஒன்பது ஆயிரம் ரூபாயினை, அகவிலைப்படியுடன் கூடிய, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்! * பணிக்கொடையாக,…
தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை நடக்கவுள்ளது. திருவிழா நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்….
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்..!
திருநெல்வேலி, செப். 22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில், இன்று ( செப்டம்பர். 22) காலையில், வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு, மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம்…
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவி நீக்க உத்தரவு மீது உச்சநீதிமன்றம் தடை..!
செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி அமுதா ராணி அவர்களின் பதவியை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞர் திருமிகு N. தளவாய் சுந்தரம் (BSc.BL) அவர்கள் தலைநகர் டெல்லிக்கு நேரில் சென்று வழக்கை தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக மனு அலிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் தங்கள் மனுக்களை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து மனுக்களை அளித்து சென்றனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
உதகையில் – நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நேற்று 21- 09- 20250 அன்று நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதகையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதரசா மாணவர்களும் ஆலிம் பெருமக்களும் மற்றும் இசுலாமிய சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நபிகள் நாயகத்தின் பெருமையை போற்றும் வகையில் அவரின் புகழை…
குடும்ப கதைகள் உடன் ஆமை வேகத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்..
செப் 22 கன்னியாகுமரி – நாகர்கோவில் – BSNL கஸ்டமர் கேர் சென்டரில் சேவைக்காக வரும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வேலையை கவனிக்காமல் ஆமை வேகத்தில் குடும்பக் கதைகள் பேசிக்கொண்டு நேரத்தை கழிக்கும் ஊழியர்கள் மீது மக்கள் விரக்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மற்ற அனைத்து நிறுவனங்களும் 5G சேவையை வழங்கும் காலத்தில், BSNL வாடிக்கையாளர்கள் இன்னமும் 3G வேகம் கூட இல்லாமல் சிரமப்படுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் குற்றச்சாட்டு: “சேவைகள் பின் தங்குவதற்கு…
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..
செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா அவர்கள், இன்று (22.09.2025) கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு, புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு, வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன…
