திண்டுக்கல், நத்தம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆன்லைன் செயலி வழியாக முதலீடு செய்தால் 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என தனியார் நிதி நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து முதலீடு செய்தனர். இதற்கிடையே நிதிநிறுவனம் மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முகவர்களாக செயல்பட்ட நத்தம் காசம்பட்டி ரமேஷ்(30), அவரது மனைவி அனிதா(26), விஜய் 27 உள்பட 9 பேரை கைது செய்தனர். அந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ரமேஷ், அனிதா, விஜய் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.சரவணக்குமார் பரிந்துரையின்பேரில் திண்டுக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி, 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
