திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் விற்பனைக்காக போதை மாத்திரைகள், டானிக்குகள் மற்றும் பட்டாகத்திகளுடன் பதுங்கியிருந்த சிறுவன் உட்பட 3 பேரை நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (S.P.) ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேடப்பட்டி மின் மயானம் எதிரே உள்ள புதர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சிலர் பதுங்கியிருப்பதை கண்ட போலீசார், அந்த பகுதியை சுற்றி வளைத்து 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்பலமான உண்மைகள்:
விசாரணையில் அவர்கள்:
- திண்டுக்கல் முருகபாவணத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பாண்டியராஜன் (19)
- நெட்டு தெரு பகுதியைச் சேர்ந்த மதுரைவீரன் மகன் விமல் (19)
- 17 வயது சிறுவன்
என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொருட்கள் பறிமுதல்:
இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து:
- 11 போதை டானிக்குகள்
- 360 போதை மாத்திரைகள்
- 3 பட்டாகத்திகள்
- 2 செல்போன்கள்
- 1 இருசக்கர வாகனம் (டூவீலர்)
ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்களுக்கு போதை பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : பாலசிந்தன்.
