FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் என பல கோடி மோசடி: நத்தம் அருகே முகவர்கள் வீடுகள் முற்றுகை – போலீஸ் வேன் மீது கல்வீச்சு!
நத்தம்: நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் FQL செயலி மூலம் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. ரூ.54,000 முதலீடு செய்தால் இரட்டிப்பு: மாய வலையில் வீழ்ந்த…
