இதழ்கள்
திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.
திண்டிவனம் : நவம்பர், 20. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை – காரைக்குடி இடையே தினசரி இயங்கி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 9ம் தேதி மதியம், சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி…
குருசடியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாநாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா சிறப்பு விருந்தினர்.
நாகர்கோவில்; நவ.20 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவியருக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஏற்படும் சிரமம் குறைக்கப்பட்டு, கல்வியில் மேலும் முன்னேற்றம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். தலைமையாசிரியர் அருட்சகோதரி பேரின்பாபாய், ஆசிரியர்கள்,…
காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை அளித்த நிவாரண நிதி.
நீலகிரி : நவம்பர்,20. முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சாரகம் குந்தா பிரிவு கெத்தை காவல் பகுதிக்கு உட்பட்ட பிரசன்ட் வேலி தனியார் பண்ணை வீட்டின் அருகே விவசாயப் பகுதியில் கடந்த 29 8 2025 ஆம் நாள் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பேர்லி சுதந்திர ராவ் என்பவருக்கு ஈம சடங்கிற்கு வனத்துறை மூலம் அன்றைய தினமே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் இன்று 20.11.2025…
கடலூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியை வசிப்பவர் அசோக்குமார் வயது (44). மனநலம் பாதிக்கபட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை இரல்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கதினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் R. விக்னேஷ்
மதுரை ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை – பக்தர்களுக்கு அன்னதானம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஜெயில் காளியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து அம்மன் தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூசாரிகளால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பஜனை, தீப ஒளி ஆகியவை ஆன்மிகச் சூழலை இன்னும் மேம்படுத்தின. பூஜைகள் முடிந்த பின்னர், பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகள்…
உடுமலைப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை க்கு உற்சாக வரவேற்பு !
உடுமலைநவம்பர் 19. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகின்ற 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. உலகின் தலைசிறந்த 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஹாக்கி சம்மேளனம் இணைந்து நடத்துகிறது. இதற்கான கோப்பை கடந்த பத்தாம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக முழுவதும் வலம் வந்து…
உடுமலையில் மண்டல அளவிலான தனித்திறன்சிலம்ப போட்டிகள்…
உடுமலைநவம்பர் 19. திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் இணைந்து மண்டல அளவிலான தனித்திறன் சிலம்பாட்டப் போட்டிகள் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றைக்கம்பு,சிலம்பம் சுற்றும் முறை, இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றும் முறை, என்ற பிரிவுகளில் ஐந்து வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு சுழற்றும் பிரிவில் ஆர் ஜி எம் மெட்ரிக்…
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள்!
திருநெல்வேலி,நவ.19:- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டங்கள், ஒவ்வொரு புதன்கிழமையும், அந்தந்த மாவட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று {நவம்பர்.19} புதன் கிழமை திருநெல்வேலியில், பாளையங்கோட்டை “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகே உள்ள, திருநெல்வேலி “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில், மொத்தம் 9 நபர்கள் கலந்து கொணடு, தங்களது…
திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின்,108- வது பிறந்த தினவிழா!காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்றது!
திருநெல்வேலி,நவ.19:- “இரும்பு பெண்மணி” என்று போற்றி புகழப்பட்டவரும், நாட்டின் 3- வது பிரதமரும், ஒரே ஒரு பெண் பிரதமருமான, “அன்னை இந்திரா காந்தி”யின்,108- வது பிறந்த நாள் விழா, இன்று { நவம்பர்.19} நாடெங்கிலும் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவின் போது, வண்ணார் பேட்டையில் உள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முகப்பில் நிறுவப்பட்டுள்ள, அன்னை இந்திராவின் முழு திருவுருவச் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரெங்கராஜ் தலைமையில், மாநில காங்கிரஸ்…
திருநெல்வேலிநடுக்கல்லூர், அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்!
திருநெல்வேலி,நவ.19:-நெல்லையை அடுத்துள்ள, பேட்டை நடுக்கல்லூர் “அரசு” மேல்நிலை ப்பள்ளியில், 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மணவர் R.கவுதம், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) போட்டியில் பஙகேற்பதற்கான, தகுதியைப் பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான சதுரங்கம் {செஸ்} போட்டியில் திறமையாக விளையாடி, மாவட்டத்தின் முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டுளளதை தொடர்ந்து, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு, தகுதி பெற்றுள்ளார்! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். மாநில போட்டிக்கு தகுதி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர் கவுதமை, “பள்ளித் தலைமையாசிரியை” J.ரோகிணி…
