Headlines

13-ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அன்னதானத்தின் எல்லை வரைறுக்கும் வரலாற்றுச் சான்று!

13-ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அன்னதானத்தின் எல்லை வரைறுக்கும் வரலாற்றுச் சான்று! 13-ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அன்னதானத்தின் எல்லை வரைறுக்கும் வரலாற்றுச் சான்று!

திருப்பூர் மாவட்டம் கொழுமம்-கொமரலிங்கம் பகுதியில் பாழடைந்த நிலையில் உள்ள ‘ஆத்தோர வெங்கட்ராமர் கோயில்’ என அழைக்கப்படும் சிவன் கோயிலில், கொங்குச் சோழர் காலத்து அபூர்வக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஆர்வலர்கள் அய்யப்பன் மற்றும் ஜீவா ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில், 1909-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் படி எடுக்கப்படாமல் விட்டுப்போன இக்கல்வெட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கல்வெட்டின் பின்னணியும் முக்கியத்துவமும்:

காலம்: கொங்குச் சோழ மன்னர் விக்கிரம சோழனின் 25-ஆம் ஆட்சி ஆண்டு (பொ.ஆ. 1299).
அமைவிடம்: கோயில் முன்மண்டபத் தென்பகுதி முப்பட்டை குமுதத்தில் 3 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

பொறித்தவர்: கோயிலில் காணி உரிமை கொண்ட ‘உடையான் சோபநாதேவன் ஆதிசைவச்சக்கரவர்த்தி’. கோயிலைச் சேர்ந்த ‘தம்பிரான் தோழர்’ என்பவர் வழங்கிய ‘சீயக்கி பழஞ்சலாகை அச்சு’ எனும் 4 காசுகளை முதலாகக் கொண்டு, தினமும் பூசையின் போது ஒரு நாழி அரிசிச் சோற்றைப் ‘பொதிச்சோறாக’ (கட்டுச்சோறு) தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டு இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

பசித்தார்க்கு மட்டுமே உணவு — கல்வெட்டு கூறும் பாடம்:
மதுரையில் இருந்து ரோமாபுரி சென்ற புகழ்பெற்ற பண்டைய ‘கொழுமம் பெருவழிப் பாதையில்’ இக்கோயில் அமைந்துள்ளதால், தொலைதூரம் பயணம் செய்யும் வழிப்போக்கர்களின் பசியைப் போக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த உணவை “பசிச்சாற்கு” (பசித்தவருக்கு) சட்டிச்சோறாக வழங்க வேண்டும் என்று கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. இன்றைய காலத்தில் அன்னதானம் என்ற பெயரில் பசியில்லாதவர்களுக்கும் உணவளித்து உணவு வீணாவதைத் தவிர்க்க, அக்காலத்திலேயே “உண்மையில் பசித்தவருக்கு மட்டுமே உணவளிக்க வேண்டும்” என்ற வரன்முறையைக் கொடை வழங்குவதில் கடைப்பிடித்துள்ளனர் என்பதை இக்கண்டுபிடிப்பு நமக்கு உணர்த்துகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *