Headlines

உரல்பட்டி கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் மனு!

உரல்பட்டி கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் மனு! உரல்பட்டி கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் மனு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் உடுமலை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உரல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஒரே வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்கள் இணைந்து வாழும் நெருக்கடி நிலை நிலவுகிறது. மேலும், பலர் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது.

உரல்பட்டி கிளைச் செயலாளர் சி.கருப்புச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் S.ஜெகதீசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சு.தமிழ்தென்றல், பிரபுராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றியச் செயலாளர் T.அருண்பிரகாஷ், விவசாயிகள் சங்க மூத்த தோழர் S.ரத்தினசாமி, உரல்பட்டி கிளை உறுப்பினர்கள் க.பவதாரணி, K.வீரம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *