கோவை: கோவை வடவள்ளி ரவுண்டானா அருகில் அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா நேற்று (02.10.2026) மாலை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு ‘நேர்டு’ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். நிகழ்வின் தொடக்கமாக, காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு, அவரது புகழைப் போற்றும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
- தமிழ்நாடு திராவிட சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேரு தாசு,
- திராவிட தமிழர் கட்சியின் சார்பில் களப்பிரர்,
- தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கராஜ்,
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் மணி,
- இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் டென்னிஸ் கோவில் பிள்ளை,
- மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன்,
- காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) பிரிவின் சிராஜுதீன்,
- அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ரபிக்
ஆகியோர் காந்தியடிகளின் தியாகத்தையும், அவரது கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உரையாற்றினர்.
மேலும், இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்தி விவரம்: சம்பத்குமார், கோவை மாவட்ட செய்தியாளர்.
