தமிழக அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் தாய்மாமன் திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தாய்மார்களுக்கு உறுதுணையாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழக அரசு சார்பில் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக பழனி அருகே உள்ள ஆயக்குடி ஓபுளாபுரம் 8வார்டு பகுதியைச் சேர்ந்த செலினாதேவி – தங்கராஜ் தம்பதியின் குழந்தை ஹரிஹரசுதனுக்கு தங்க மோதிரத்தை பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் வழங்கினார்
அப்போது உடன் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர். தங்க மோதிரம் பெற்ற குழந்தையின் குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கும், தலைமை மருத்துவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
தாய்மாமன் திட்டத்தால் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருவது அதிகரித்துள்ளதாகவும், இத்திட்டம் தாய்-சேய் நலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
