Headlines

பழனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி!

பழனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி! பழனியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையம் அருகே ஆர்.எப் ரோட்டில் பெரும் பரபரப்பு. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாமல் தற்காலிகமாக மண் போட்டுமூடப்பட்டிருந்ததால் விபரீதம் நடந்துள்ளது.

பழனியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து, சாலையோரம் ஒதுங்கிய போது, மழையால் சேறும் சகதியுமாக மாறியிருந்த பள்ளத்தில் டயர் முழுவதும் இறங்கி சாய்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வழியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பின்னர் JCB இயந்திரம் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டது.

இதே இடத்தில் சில நாட்களுக்கு முன்பும் ஒரு பேருந்து இதே போல் பள்ளத்தில் சிக்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பணிகளை முடித்தவுடன் குழிகளை முறையாக சீரமைக்காமல் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலட்சியம் தொடர்ந்தால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்பதால் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *