மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்.
தேரோட்டத்தையொட்டி மின்பாதையை மாற்றியமைத்தபோது சம்பவம்; தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் நாகர்கோவில் கோட்டார் ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, தெருவீதிகளில் உள்ள மின்வயர்களை பாதுகாப்பாக மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் எதிர்பாராத மின்விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் நேற்று காலை மின்வயர்களை மாற்றியமைக்கும் பணியில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அரவிந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது மற்றொரு…
