ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.
உடுமலை நவம்பர் 17. புதர் மண்டி காணப்படும் அமராவதி கிளை ஓடை மற்றும் குமரலிங்கம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமராவதி கிளை ஓடை செல்கிறது. பாப்பான்குளத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் இந்த ஓடை அமைந்துள்ளது ஓடையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது தற்போது இந்த ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்…
