தமிழ்நாடு
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 20 : நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், IPS அவர்களுடன் இணைந்து அடிக்கல் நாட்டினர். பின்னர் சிறப்புரையாற்றிய அவர்கள், ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்காக இக்கட்டிடம் பெரும் பயனளிக்கும் என தெரிவித்தனர். அத்துடன், காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள்,…
கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி.
ஆக் 20, கன்னியாகுமரி மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் நினைவாக கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் என். சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி…
நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.
ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் 51வது வார்டில் ரூ.43.82 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று துவக்கமிடப்பட்டது. பிள்ளையார்புரம், சின்னநைந்தான்விளை மற்றும் திருநகர் சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் இப்பணியின் மூலம் அப்பகுதி மக்கள் சாலை வசதி பெற உள்ளனர். துவக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மேயர் ரே. மகேஷ், தெற்கு மண்டல சேர்மன் Dr. பி. முத்துராமன், மாநகராட்சி பொறியாளர் ராஜ…
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி.
ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணக்குடி சாலை வெள்ளாடிச்ச விளை அருகே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சம் நிலவிகிறது. அந்த பகுதியில் மாடுகள் சாலையில் தடையாக இருந்துகொண்டு இருப்பதால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பெரிய அளவில் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளது. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத மாநகராட்சியிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்து,…
துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை.
ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அருள்ரீகன் (43) என்ற நபர், துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கலில் சிக்கியுள்ளார். தகவலின்படி, துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு படகை ரஷ்ய நாட்டு நபர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும், அருள்ரீகனை உடந்தையென பொய்யாக குற்றம்சாட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை…
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்.
ஆக் 20, நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ராமன்புதூர் சந்திப்பில் வித்தியாசமான போராட்டம் ஒன்று நடைபெற்றது. அன்பு தேசம் மக்கள் இயக்கத் தலைவர் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரத்தினமணி, மத்திய அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தன்னுடைய உடம்பில் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே…
கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு.
ஆக் 20, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி பேச்சியம்மாளின் 4 மாத பெண் குழந்தை நேற்று தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தாய்ப்பால் புரையேறி மூக்குவழியாக வெளியேறியது. இதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிறுமி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர்…
நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்.
நாகர்கோவில், ஆகஸ்ட் 20:இன்று (20.08.2025) காலை சுமார் 7.30 மணி முதல் 7.40 மணிக்குள், நாகர்கோவில் மாநகரம் வெட்டூர்நிமடம் – பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் நபர் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபரின் பின்னுத் தலைவர் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டதோடு, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108…
கன்னியாகுமரியில் சுற்றுலா வெள்ளம்.
ஆக் 19, கன்னியாகுமரி சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை படகில் சென்று கண்டு ரசித்துள்ளனர். ஒரு நாளுக்கு சராசரியாக 3,500 டிக்கெட்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேமராமேன் : ஜெனீருடன், குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர்…
தக்கலை பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சுந்தர் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். டிரைவர் அருள்சுந்தர் குடி போதையில் டெம்போவை ஓட்டி வந்தது தெரியவந்ததால் காவலர் பெல்ஜின் ஜோஸ் ஆல்ஹகால் பிரீத்திங் அனலைஸர்…
