தமிழ்நாடு
திருவிதாங்கோடு பள்ளி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…
அக் 08 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர. அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலுக்கு கொடி கொண்டு வரப்பட்டது நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் செய்யது முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார், தலைவர் அன்வர் ஹுசைன் கொடி ஏற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு நேர்ச்சை…
மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் : தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்..
திராவிட மாடல் ஆச்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து ,உதகை மலைப்பகுதி மகளிர் விடியல் பயணம் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண துவக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று(06.10.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்…
கடலூர் :மாணவியை கடத்திய அண்ணன் -தம்பி கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் மாணவியிடம் பழகிய கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த மதன்குமார் வயது (22) திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றார்.இதயடுத்து சிறுமியை கடத்திய மதன்குமார் மற்றும் உடந்தையாக இருந்த அவருடைய தம்பி யான (18) வயது சிறுவன் ஆகியோரை ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி செய்தியாளர்R. விக்னேஷ்
திருநெல்வேலியில், 16 கோடி ரூபாய் மதிப்பில் முடிவு பெற்ற மேம்பாட்டு திட்டங்களை, காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருநெல்வேலி, அக்.6:- பாளையங்கோட்டையில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் அதிநவீன பல்நோக்கு மருத்துவ மனை வளாகத்தில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைப்பதற்காக, 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, கூடுதல் மருந்துகள் சேமிப்பு கிடங்கினையும், மாவட்ட சுகாதார அலுவலகம் அருகில், 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள, நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை எந்திரங்களின் செயல்பாட்டினையும்,…
ஊத்துமலை பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்.
தென்காசி, அக் – 06 – தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், ஊத்துமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்களது குலத்தொழிலாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த விவசாய நிலத்தில் பக்கத்தில் இருக்கும் ஊத்துமலை வனப்பகுதியில் இருந்து காட்டுப் பன்றிகள், மான்கள், மிளா, கரடிகள், மயில்கள் போன்ற வன உயிரினங்கள் விவசாய நிலங்களில் புகுந்து முற்றிலுமாக விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகுவதோடு தொடர்ந்து…
உடுமலை ரயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு.!
செப் 07, உடுமலை – உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை பயணிகளுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் ரயில் பாதையை ஒட்டியுவாறு தெற்கு புறமாக உள்ள ரயில்வேக்கு சொந்தமான காலிஇடத்தில் மரங்கள் நடுவது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சி உடுமலை பழனி திண்டுக்கல் வழியாக இயங்கிய கோவை தாம்பரம் கோவை திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்கவும்…
உடுமலையில் குருஜி சிவாத்மா தலைமையில் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா..
செப் 07. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி நகர் எக்ஸ்டன்சனில் இயங்கிவருகிறது பிரபஞ்ச அமைதி ஆசிரமம் இங்கு முதியவர்களை மகிழ்வித்து மகிழ்வோம் எனும் அடிப்படையில் ஆதற்றவற்ற முதியவர்களை அரவனைத்து ஆசிரமத்தில் தங்க வைத்து அவர்களுக்கு இலவசவசமாக உணவு உடை போன்றவற்றை வழங்கி பராமரிக்கபட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் ஐந்தான் ஆண்டு விழா குருஜி சிவாத்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரமத்தின் நன்கொடையாளர்கள் சியாம்பிரசாத் டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீகண்டன்…
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான வசதி இல்லாததால் அதிருப்தி..
செப் 07, உடுமலை – உடுமலை அக்.6-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் தேவையான அளவு நிழல் கூரை அமைத்தல், இருக்கை வசதி ,காத்திருப்பு அறை,பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணியர் அதிருப்தியில் உள்ளனர். திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில் பாதையில் அமைந்துள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மதுரை ரயில்வே கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. ரயில்வே ஸ்டேஷனில் மூன்று பெட்டிகளுக்கான பயணியர் ஏறும் பகுதியில் மட்டுமே நிழல் கூரை…
அதிகாரிகளின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகும் குடிநீர்!
திருநெல்வேலி,அக். 4:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள, “பரமேசுவரபுரம்” கிராமத்தில், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் விநியோகக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகி வரும் குடிநீரில், சிலர் பண்டம் பாத்திரங்களை கழுவியும், வேறு சிலர் மாடுகளை குளிப்பாட்டியும், இதிலும் சிலர் இருசக்கர வாகனங்களை சுத்தப்படுத்தியும் வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால், மெத்தனப்போக்கால், தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவது, மக்களிடம் வேதனையை,…
திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டத்தில், கனமழை மற்றும் பெருங்காற்றால் சாய்ந்த வாழைப்பயிர்களை, நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
திருநெல்வேலி,அக்.4:- நெல்லை புறநகர் மாவட்டத்தில், கூனியூர், வடக்கு காருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, வடக்கு வீரவநல்லூர்-1, வடக்கு வீரவநல்லூர்-2, கிரியம்மாள் புரம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில், நேற்று (அக்டோபர். 3) கனமழை பெய்ததுடன், பெருங்காற்றும் வீசியது. இவற்றால், இவ்வூர்களில் பயிரிடப்பட்டிருந்த பணப்பயிரான வாழைப்பயிர்கள், பெருமளவில் சாய்ந்து விழுந்து, சேதம் அடைந்தன. இவ்வாறு, சுமார் 60ஆயிரம் வாழைகள் வரை, சேதம் அடைந்திருக்கலாம்!என, தெரியவருகிறது. கனமழை மற்றும் பெருங்காற்றினால், சாயந்த வாழைப்பயிர்கள் குறித்த, கணக்கெடுப்பு பணிகளை, தோட்டக்கலை…
