இதழ்கள்
கோவை மாநகராட்சி பொதுநிதியின் கீழ் கூடுதல் அபிவிருத்தி பணிகள் மற்றும் டயாலிசிஸ் மையம் திறப்பு விழா..
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் 70- வது வார்டு க்குட்பட்ட புரூக்ஃபீல்ஸ் சாலையில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில், மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.149.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அபிவிருத்தி பணிகள் மற்றும் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், ஆகியோர் துவக்கி வைத்தார்கள். உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப.,…
ஷேக் முகமத் நியமனம் – இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வாழ்த்து…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளராக, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களால் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு. ஷேக் முகமத் அவர்களுக்கு, நாகர்கோவில் மாநகர இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஹமீத் பயாஸ் அவர்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நியமனம், கட்சியின் அடிப்படை கொள்கைகள்—சமத்துவம், சமூகநீதி, மனித உரிமைகள்—ஆகியவற்றை வலுப்படுத்தும் முக்கியமான அடையாளமாகும். நீண்ட காலமாக கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து, பொதுமக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் திரு….
ஒன்றிய அரசுக்கு எதிராக, திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நிர்வாகிகள்!
திருநெல்வேலி, ஜன. 5:- தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, தபால், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளில், ஒரு லட்சம பணியிடங்களை பறித்து, தமிழ் மக்களுக்கு ‘துரோகம்’ செய்த, மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ‘அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்’ சார்பாக, நாடு தழுவிய முறையிலான ‘கண்டன ஆர்ப்பாட்டம்’ இன்று (ஜனவரி5) காலையில் திருநெல்வேலியிலும், நடைபெற்றது. நெல்லை சந்திப்பு ரயில்நிலயம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், திருநெல்வேலி மாவட்ட…
கடையநல்லூர் அருகே பயங்கரம்வீட்டு குளியலறையில் பெண்ணை குத்திக்கொன்று நகை கொள்ளை நாடகமாடிய என்ஜினீயர் அதிரடி கைது.
கடையநல்லூர் : ஜனவரி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேவீட்டு குளியலறையில் புகுந்து பெண்ணை சரமாரி குத் திக்கொலை செய்து நகையை கொள்ளைய டித்து விட்டு நாடகமா டிய என்ஜினீயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொழிலாளி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அருணாசலபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யங்கண்ணு துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முருக செல்வி (வயது 39) பீடி சுற்றும் தொழிலாளி இந்த தம்பதிக்கு 10…
கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த இருவர் கைது.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலாமேடு அருகே உதவி ஆய்வாளர்கள் திரு.சண்முகம், திருமதி.பவித்ரா மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியில் இருந்த போது சாலாமேடு பிரியதர்சினி நகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரிகளை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ஸ்ரீ வெங்கட பிரசாத் (20) மற்றும் திருவெண்ணெய்நல்லூர்…
புதுச்சேரியில் இருந்து பேருந்தில் மதுபானங்கள் கடத்தி வந்த இருபெண்கள் கைது.
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுதன் மற்றும் திரு.நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு பெண்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவர இதன் எதிரிகள் செஞ்சி மழவந்தாங்கல் மலையரசன் குப்பம் புது தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி தமிழரசி (60) மற்றும் அதே…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு…
சென்னை, ஜனவரி 03: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இன்று இரவு முகநூல் (Facebook) நேரலை மூலமாக கட்சியின் 234 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் 90 தொகுதி மாவட்ட செயலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 138 புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28 மாவட்டங்களுக்கான நிர்வாக அமைப்புகள் (பதவிகள் மற்றும் பொறுப்பாளர்கள்)…
*திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு மட்டுமே அனுமதி; கந்தூரிக்கு இல்லை.. நீதிமன்றத்தில் அரசு தகவல்..
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு மனுதாரர் தரப்பு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை; மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என அரசுத் தரப்பு வாதம். வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி ஸ்ரீமதி. மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்…
தென்காசி, ஜன – 03 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ச.ராஜசேகரன், மாவட்ட மாநில பொருளாளர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் தனக்கன்குளத்தில் தவெக கிராம சபை கூட்டம்..
மதுரை :தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் கழகப் பொதுச்செயலாளர் ஆலோசனைப்படி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் வெங்கல மூர்த்தி அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்த முக்கியமான கிராம சபை கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி கழகத் தோழர்கள், கிளை…
