இதழ்கள்
நீலகிரி மாவட்ட கூட்டுவார விழா.. கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா..
72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் வாகனங்கள் மூலம் கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் விற்பனை மேளா நடைபெற்றது. உதகமண்டலத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு நிறுவன விற்பனை வாகனமானது பொக்காபுரம் மற்றும் அதனை பகுதியில் விற்பனையினை மேற்க்கொள்ள மண்டல இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. அதே போல நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வாகனம் கோக்கால்…
பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..
நாகர்கோவில், நவ.15: “நேற்று (15/11/2025) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் திமுக கிழக்கு பகுதி சார்பில் வாழ்த்து போஸ்டர்களை நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டர்களில் மாண்புமிகு முதலமைச்சர், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் எங்கள் கட்சி நண்பர்கள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனே நான் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள்…
கூட்டுறவு வார விழா இலவச கண் பரிசோதனை முகாம்..
72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளான இன்று 15.11.2025 சனிக்கிழமை நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமானது கூட்டுறவுத்துறை மற்றும் ஐ பவுண்டேஷன் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு….
திருநெல்வேலியில், முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!
திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவின் முன்னாள் நிர்வாகி, திருநெல்வேலி மாவட்ட, “முன்னாள் அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ், திருவுருவப்படத்திற்கு, அவருடைய “நினைவு” தினமான இன்று (நவம்பர்.15) காலையில், அதிமுக நிர்வாகிகள் “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழச்சியில், அமைப்பு செயலாளர் “சுதா” K. பரமசிவம், கொள்கைபரப்பு துணை செயலாளர் “பாப்புலர்” V முத்தையா, அனைத்துலக MGR மன்ற…
உடுமலைப் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்.. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!
உடுமலைநவம்பர் 15. உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.மத்தீன் தலைமை வகித்தார்.நகராட்சி ஆணையாளர் ஜெ.விநாயகம் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. முதல் நிகழ்வாக கரூர் கூட்ட நெரிசல்,ஹைதராபாத் பஸ் விபத்து மற்றும் செங்கோட்டை விபத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 78 தீர்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது. இதில் 17-வது தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்கள் ஏகமனதாக…
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்…
உடுமலைநவம்பர் 15. பிஏபி நான்காம் மண்டலம் 4ம் சுற்று நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பி ஏ பி பாசனம் 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் கோவை, திருப்பூர், மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. வரும் டிச ஒன்பதாம் தேதி வரை 135 நாட்களில்…
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!
உடுமலைநவம்பர் 15. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்னேஷ்(18).இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தர்னேஷ் உடன்படிக்கும் மாணவி ஜீவிதா(18) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி-உடுமலை சாலையில் பழனிக்கு வந்து கொண்டிருந்தார். இவரது வாகனம் அந்தியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதியது. இதனால் நிலைகுலைந்த தர்னேஷ் மற்றும் ஜீவிதா…
உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…
உடுமலைநவம்பர் 15. உடுமலையில் சேதம் அடைந்த உழவர் சந்தையின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது.இதில் 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட் ,பாகற்காய், புடலங்காய் ,சுரைக்காய், மற்றும் கீரை…
திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!
திருநெல்வேலி,நவ.15:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட, “முருகானந்த புரம்” எனும் ஊரில், திருச்செந்தூர்- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்செந்தூரில் இருந்து, 83 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து, இன்று( நவம்பர்.15) காலை சுமார் 9.30 மணி அளவில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. பேரூந்தில் பயணம் செய்தவர்களில், 27 நபர்களுக்கு “லேசான காயம்” ஏற்பட்டது. விபத்து குறித்த…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை…
மதுவிலக்கு அமல் பிரிவு, மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கெங்காரம்பாளையம் சாதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் திரு.குணசீலன், திரு.விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு.வினோத் ஆகியோர் பணியின் போது புதுச்சேரி மில்லி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்த எதிரிகளை கைது செய்ய உதவிய மூன்று காவலர்கள் மற்றும் தலைமை காவலர்…
