Headlines

பழனி அருகே மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி அருகே மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி அருகே மானூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது மானூர் ஊராட்சி. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக சின்டெக்ஸ் தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள‌ தண்ணீரே மாணவர்களின் குடிநீராகவும், பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை மலம் கலந்துள்ளதை சமையல் பணியாளர்கள் முதலில் பார்த்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார்‌ உடனடியாக ஆட்களை வைத்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊரில் தகவல் பரவியதைடுத்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் குழந்தைகளின் இன்று பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீரனூர் போலீசார் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தண்ணீர் தொட்டியில் மலம் கலந்திருந்தது உண்மை என்பது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தற்போது பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *