Headlines

பழனியில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்னறிவிப்பின்றி புறநகர் பகுதிக்கு சென்றதால் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்..

பழனியில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்னறிவிப்பின்றி புறநகர் பகுதிக்கு சென்றதால் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்.. பழனியில் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்னறிவிப்பின்றி புறநகர் பகுதிக்கு சென்றதால் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட சுகாதார அலுவலகம் எவ்வித முன் அறிவிப்பின்றி நெய்க்காரப்பட்டிக்கு மாற்றப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

தொடர்ந்து பழனி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த மாவட்ட சுகாதார அலுவலகம் நகர் மற்றும் புறநகர பகுதியில் இருந்து மருத்துவமனை சம்பந்தமான தகவல்கள் அறிவிப்புக்கள் புகார்கள் போன்றவற்றை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட சுகாதார அலுவலகத்தை புறநகர பகுதியான நெய்க்காரப்பட்டிக்கு எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தகவல்கள் சேகரிப்பதற்கும் புகார்கள் தெரிவிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்..

உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரும் இந்நிகழ்வில் தலையிட்டு

பழனி பெருநகராட்சி விரைவில் மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட சுகாதார அலுவலகத்தை மீண்டும் நகர் பகுதிக்குள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தன்னார்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *