திண்டுக்கல் GTN கல்வி குழுமத்தில் இன்று புதிய துறை துவக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் இயங்கி வரும் GTN பார்மசி கல்லூரியில் (Pharmacy Council of India அங்கீகாரம் பெற்றது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) இந்த கல்வி ஆண்டு முதல் B.Pharm மற்றும் http://D.Pharm ஆகிய பிரிவுகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது. கல்லூரி தாளாளர் மற்றும் தலைவர் டாக்டர் லயன் K.ரத்தினம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்மசி கவுன்சில் செயற்குழு உறுப்பினர் Dr. N. Deattu, GTN பார்மசி கல்லூரி இயக்குனர் Dr. R. Durai, முதல்வர் Dr. K.L. செந்தில்குமார், கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், பல்வேறு துறை சார்ந்த கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் புத்தக வெளியீடும் நடைபெற்றது.
