கோவை, ஏப். 08:
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் நேற்று மாலை (06.03.2026) மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பகுதிச் செயலாளர் திரு. மதியழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், வார்டு வாரியாகப் பொறுப்பு வகிக்கும் BLA-2 மற்றும் BLA ஆகியோருக்கு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து, தேர்தல் களப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த அறிமுகக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக:
வட்டப் பொறுப்பாளர்கள்: திரு. குமரேசன், திரு. ஆறுமுகம், திரு. கிருஷ்ணராஜ். மாமன்ற உறுப்பினர்: திரு. சம்பத். நிர்வாகிகள்: திரு. சிராஜுதீன் (BLA 3), திரு. மோகன்ராஜ், திரு. பாலன், திரு. சண்முகம். மேலும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் களப்பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்.
