விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில்விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், விழுப்புரம்–புதுவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிகழ்வில், கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து பூஜை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விசில் சின்னம் எளிய மக்களின் சின்னமாக இருப்பதாகவும், அதை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்த சின்னம்…
