இதழ்கள்
மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா…
02-02-2026, கோவை:கோவைமாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான திரு.பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில்,கோவை 80-வது வார்டில் மட்டும் இதுவரை 967 மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியுள்ளது. என்று கோவை…
நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ
மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.* மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை….
கோவை,கணபதி, ராஜவீதி, பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி.
கணபதி ராஜவீதி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு….
PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா..
கோவை 10,00,000 மாணவர்கள் பயனடையும் வகையில் திராவிட மாடல் அரசின் கல்வி முன்னேற்றத் திட்டத்தின் கீழ் *மடிக்கணினிகள் வழங்கும் விழா. கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரியில் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் கல்வி கொள்கையை முன்னெடுத்து, இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் இரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இணைந்து மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்….
கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
பத்துகாணி,ஜனவரி 30: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள்…
மதுரையில் போஸ்டர் யுத்தம்!
மதுரை வடக்கு தொகுதி காங்.,’ என்ற பெயரில், தொகுதி முழுவதும் ‘காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மதுரை நகர் காங்., தலைவர் நல்லமணி கூறுகையில், “இந்த போஸ்டருக்கும் நகர் காங்கிரசுக்கும் தொடர்பில்லை” என்றார். தி.மு.க.,வினர் கூறியதாவது: காங்கிரசை தளபதி எம்.எல்.ஏ., விமர்சித்த விவகாரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மதித்து தி.மு.க.,வினர் அமைதி காக்கின்றனர். ஆனால் எங்களை உசுப்பேத்தும் வகையில் காங்கிரசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தளபதி வீட்டை இளைஞர் காங்.,…
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 – கேர்பென் பகுதியில் என்வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி”என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. கே.எம்.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிச் செயலாளர் நெல்லை கண்ணன், நிர்வாகிகள் பசவன், சந்தீப், பிரதீப், ஊர் தலைவர் தர்மலிங்கம், நகர மன்ற உறுப்பினர் தாமோதரன், BLA2- கணேசன், BDA-கற்பகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி
குடியிருப்பு பகுதி சாலை கனரக வாகனங்களால் சேதம் இருபுறமும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ள இளங்கடை கச்சேரி சாலை, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலையாக அமைக்கப்பட்டது. முன்பு கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கிய இந்த சாலையில், கடந்த சில மாதங்களாக டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிகாலை முதல் இரவு வரை லாரி ஊர்வலம் அதிகாலை நேரத்திலேயே தொடங்கும் லாரி போக்குவரத்து, நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை…
நீலகிரியில் பாஜக பட்டியல் அணி அறிமுகக் கூட்டம் உற்சாகம்.
உதகை,எல்லநள்ளி:நீலகிரி மாவட்ட எல்லநள்ளி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில், உதகை மேற்கு மண்டல அறிமுகக் கூட்டம் மாவட்ட பட்டியல் அணித் தலைவர் திரு. எஸ். தங்கம் ஜி அவர்கள் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பட்டியல் அணியின் மாநிலத் துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு. பி. முருகேசன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் ஏ. தர்மன் ஜி அவர்கள்…
கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.
நாகர்கோவில், சன 29: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஃப்ளெக்ஸ் ஒட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. முக்கிய திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அவற்றில்:…
