தமிழ்நாடு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், ஆனிப்பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!
திருநெல்வேலி, ஜூன்.23:- தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றதும், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானதுமான, திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள்” திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாக்களுள் ஒன்று “ஆனிப்பெருந்திருவிழா” ஆகும். இந்த திருவிழா இம்மாதம் [ஜூன்] மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கவுள்ளது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான “திருத்தேரோட்டம்” அடுத்த மாதம் [ஜூலை] 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வர் என,…
விருது பெற்றுள்ள தமிழ் அறிஞர்களுக்கு, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு நூலகத்தில், பாராட்டுவிழா!
திருநெல்வேலி, ஜூன்.23:- திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், “அரசு” கிளை நூலகத்தில், “தாமிரபரணி வாசகர் வட்டம்” மற்றும் “தேசிய வாசிப்பு இயக்கம்” ஆகியவற்றின் சார்பில், தமிழக அரசின் “தூய தமிழ் பற்றாளர் விருது” பெற்ற கவிஞர் ந.ஜெயபாலன் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்புக்காக “சாகித்திய அகாதமி” விருது பெற்ற பேராசிரியை ப.விமலா ஆகிய இருவருக்கும் பாராட்டு விழாவும், அவர்கள் எழுதிய நூல்களுக்கு திறனாய்வு நிகழ்ச்சியும், நேற்று [ஜூன்.22] ஞாயிற்றுக்கிழமை மாலையில், நடைபெற்றன. வாசகர் வட்டத்தலைவர் “முனைவர்” க.சரவணகுமார், அனைவரையும் வரவேற்று,…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில். தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் நடிகர் ஆகிய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சுமார் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விஜய் ரசிகர் மன்ற செயலாளர் சந்துரு.இணைச் செயலாளர் குழந்தை இயேசு.பொருளாளர் ராபின். மற்றும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள்.மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்து. அன்னதானத்தை உண்டு மகிழ்ந்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி.
தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில், ஒத்தக்கால் மண்டபம் முதல் வேலந்தாவளம் வரை உள்ள சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது, இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஆகையால் அங்குள்ள குப்பைகளை அகற்றி அங்கு குப்பைத் தொட்டி அமைத்து கொடுக்குமாறு ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய சிறார் உட்பட மூன்று பேர் கைது. ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவின்.பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ். தலைமையிலான கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஏழுமலை. மற்றும் காவல் துறையினர் சிறார் உள்பட மூன்று பேரை கைது செய்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உலக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
உலக சர்வதேச யோகா தினத்தையும் கொண்டாடும் விதமாக அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சி கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் செயலர் அவர்களும், மற்றும் கல்லூரி முதல்வர். முனைவர். ரா .ரவிச்சந்திரன் கல்லூரியின் யோகா மன்ற பொறுப்பு ஆசிரியர் பூ.திருப்பதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். யோகா பயிற்சியினை வழங்க வாழ்க வளமுடன் பேராசிரியர் ரோஜா ஈஸ்வரி, மற்றும் பெருமாள் சாமி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா முக்கியத்துவம்…
அகில உலக கூட்டுறவு ஆண்டு – மரக்கன்றுகள் நடும் விழா.
ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவாளர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் சுமார் பன்னிரெண்டாயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் எப்பநாடு பகுதியில் அமைந்துள்ள எப்பநாடு தொழிற்கூட்டுறவு தேயிலை…
வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் எம். பாலாடாவில் ( முத்தோரை) தினமும் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இருபுறமும் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து காவல்துறை இங்கு வாகன நிறுத்தத்தை ஒழுங்குப்படுத்தி , பொதுமக்கள், மாணவர்கள் தினமும் சிரமமின்றி சென்றுவர, நெரிசல் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுத்து சீர் செய்து கொடுக்கும்படி, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…
தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்கள் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA வரவேற்பு பணிகள் குறித்து ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நேரில் சென்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட து.செயலாளர்…
சங்கராபுரம்ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா கொண்டாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 21.6.2025 சனிக்கிழமை தேசிய யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் துணைத் தலைவர் பி ஏ மகேந்திரன், செயலாளர் சுகந்தி பட்டு ராஜன்,துணை செயலாளர் என் பிரபாகரன் ,முதல்வர் கே சுந்தர பாண்டியன் இருபால் ஆசிரியர் பெருமக்கள் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சங்கராபுரம் பகுதி மனவள கலை மன்றத்தின் தலைவர் திருவாளர் RVN சீனிவாசன், செயலாளர்…
