இதழ்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!
திருநெல்வேலி,அக்.28:- திருநெல்வேலி மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளில் நடைபெற்று வரும், “தாமிரபரணி” கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், 423.13 கோடி மதிப்பில், களக்காடு நகராட்சி, பணகுடி, வடக்கு வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, திசையன்விளை, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய, 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், இன்று (அக்டோபர்.28) நெல்லை மாவட்ட ஆட்சியர்…
உடுமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆமை மீட்பு.
உடுமலை, அக் – 28. உடுமலை ஜெய்லானி நகரில் குடியிருப்பு பகுதியில் ஆமை ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆமையை உயிருடன் பிடித்து உடுமலை வனத்துறை ஊழியர் காளிமுத்து வசம் ஒப்படைத்தனர்.
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்…
உடுமலைஅக்டோபர் 28. உடுமலை அக்.28-உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன் ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் நாயப் சுபேதார்நடராஜ் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலையில் வகித்தார். இதில் சிறப்புஅழைப்பாளராக கர்னல் நாகராஜ், சித்ராநாகராஜ், ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்….
உடுமலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனுக்கு திருக்கல்யாணம்: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்…
உடுமலை, அக்டோபர் 28- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த…
நெல்லை மாநகராட்சியின், நான்கு மண்டலங்களிலும், மொத்தமுள்ள 55 வார்டுகளிலும் நடைபெற்ற, சிறப்பு கூட்டங்கள்! மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி,அக்.28:-தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சேர்த்து, மொத்தம் உள்ள 55 வார்டுகளிலும், மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர்.மோனிகா ராணா அறிவுறுத்தலின் படி, இன்று (அக்டோபர். 28) வார்டு சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, ஆங்காங்கே நடைபெற்ற கூட்ங்களுக்கு, அந்தந்த வார்டுகளின், மாமன்ற உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். திருநெல்வேலி மண்டலம் 25-வது வார்டில், வடக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில்,25-வது வார்டு…
விழுப்புரத்தில் பைனான்சியர் கடத்தல் பரபரப்பு – பத்திற்கும் மேற்பட்டோர் கையில் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் கடத்தல்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தி பகுதியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருபவர் சிவா இவரை மர்ம நபர்கள் இன்று காலை அவரது இல்லத்தில் புகுந்து கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்படி பைனான்சியர் சிவா முன்பு மதுரையில் தொழில் செய்து வந்தபோது அங்குள்ள சில நபர்களிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த விவகாரத்துக்காகவே இன்று காலை பத்திற்க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்…
நாகர்கோவில் அரசு அதிகாரிகளின் அநீதி எதிர்ப்பு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
நாகர்கோவில், அக்.28,சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, நாகர்கோவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணியளவில், நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் சிறுபான்மை சமூகத்தவரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் மின்சாரத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டித்தது, கடுமையான சட்ட மீறல் என்றும், இது சிறுபான்மை சமூகத்தை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட தாக்குதலாகும் என்றும் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அல்…
சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
தனக்கு வேண்டும் என்பது தேவை!! எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை!!என்ற கொள்கை மனப்பான்மையோடு தன்னுடைய ஊதியம் கொண்டும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ். இஸ்லாமியராக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர மக்களும் பண்டிகை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், நண்பர்களின் உதவியோடு மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியுள்ளார். மேலும் தீபாவளி அன்று சாலையோர…
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.
தக்கலை அக்டோபர் 27, திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பு பகுதியில் முகமாத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெடிக்கல் கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது குளச்சலில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 332) சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் பைக் உருகுலைந்தது தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை காவல்துறையினர் பஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை…
கன்னியாகுமரியில் ‘Youth Talks’ — கனிமொழி எம்.பி மாணவர்களுடன் ஊக்கப்பேச்சு.
அக் 27 கன்னியாகுமரி தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் “Youth Talks” என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளைஞர்களின் எதிர்காலம், கல்வி, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார். நிகழ்வில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்,…
