இதழ்கள்
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி.
ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணக்குடி சாலை வெள்ளாடிச்ச விளை அருகே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சம் நிலவிகிறது. அந்த பகுதியில் மாடுகள் சாலையில் தடையாக இருந்துகொண்டு இருப்பதால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பெரிய அளவில் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளது. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத மாநகராட்சியிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்து,…
துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை.
ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அருள்ரீகன் (43) என்ற நபர், துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கலில் சிக்கியுள்ளார். தகவலின்படி, துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு படகை ரஷ்ய நாட்டு நபர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும், அருள்ரீகனை உடந்தையென பொய்யாக குற்றம்சாட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை…
கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு.
ஆக் 20, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி பேச்சியம்மாளின் 4 மாத பெண் குழந்தை நேற்று தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தாய்ப்பால் புரையேறி மூக்குவழியாக வெளியேறியது. இதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிறுமி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர்…
தக்கலை பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சுந்தர் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். டிரைவர் அருள்சுந்தர் குடி போதையில் டெம்போவை ஓட்டி வந்தது தெரியவந்ததால் காவலர் பெல்ஜின் ஜோஸ் ஆல்ஹகால் பிரீத்திங் அனலைஸர்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மீது துன்புறுத்தல் இருக்கிறது என்ற தரவுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், அவர்களுடைய உரிமைகளை முழுமையாகவும் பெறுகின்றனர். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அதிக அளவில் வழங்கி வருகிறார்” எனக் கூறினார். குமரி மாவட்ட செய்தியாளர்பாவலர்…
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடல்பகுதியில் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் முதலிடத்தில் வகைப்படுத்தப்பட்ட ராட்சத யானை திருக்கை மற்றும் பெல்ட் சுறா போன்ற மீன்கள் டண்களுக்குத் டன் அளவில் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, சுமார் 20 டன் எடையில் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மூன்று லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு கேரளா மாநிலத்திற்கு கடத்த முயற்சிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனத்துறை குழுவினர் திடீர் சோதனை நடத்தி, அந்த வாகனங்களை மடக்கிப்பிடித்துள்ளனர். எனினும், பாதுகாக்கப்பட்ட கடல் உயிரினங்களை டண் கணக்கில் வேட்டையாடியவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சம்பவம்,…
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷே அப்துல் ரஹமான்.இ..ஆ.ப. அவர்களிடம் விழுப்புரம் பத்திரிக்கையாளர் நலச் சங்கம் சார்பில் நல சங்க மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமையில் செயலாளர் சிவசந்திரன் பொருளாளர் பரணிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வி தொடர உள்ளார். இந்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அவர்கள் அவருக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பங்கேற்றனர். — பாவலர் ரியாஸ்குமரி…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !
ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…
