தமிழ்நாடு
கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :
தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி…
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிலம் மோசடி – மக்களின் கடும் கண்டனம்.
செப் 4, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள சுமார் 4.55 ஏக்கர் (சர்வே எண் 171/4) நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ள லேண்ட் மாஃபியா கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 21.08.2025 அன்று திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வரும் புரோக்கர் ஷேக் முகமது என்பவன், மேற்படி 4.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய தாயாரின் சொத்து எனக் காட்டி, போலியாக ஆவணங்கள் தயாரித்து, பூவங்கோடு…
நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !
செப் 4 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள்…
குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :
செப் 4 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார். இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
குளச்சலில் விசைப்படகுகளில் கணவாய் மீன்கள் குவிந்தது :
செப் 4, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை பகுதியில் இன்று (செப். 4) அதிகாலை கடலிலிருந்து திரும்பிய விசைப்படகுகளில் கணவாய் மீன்கள் மற்றும் பல்வேறு வகை கடல் உயிர்கள் அதிக அளவில் கிடைத்ததால், மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தகவல்படி, குளச்சல் கடல்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டனர். அதில், கரையோரம் திரும்பிய சுமார் 20 விசைப்படகுகளில் கணவாய், தோட்டு கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்கள் பெருமளவில் பிடிபட்டன….
குமரி பெருஞ்சுவர் – மறக்க முடியாத வரலாற்றுச் சின்னம் !
தமிழர் வரலாற்றை ஆராயும்போது “குமரி” என்ற சொல் தவிர்க்க முடியாததாகும். சங்க இலக்கியங்கள், புராணக் குறிப்புகள், மக்கள் மரபுக் கதைகள் என பல்வேறு ஆதாரங்களில் குமரி பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சுவடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள குமரியின் வரலாற்றில், பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அற்புதமான வரலாற்றுச் சின்னம் தான் குமரி பெருஞ்சுவர் (The Great Wall of Kumari). சுவரின் தோற்றம் மற்றும் புவியியல் பரப்பு செம்பவளம் ஆய்வுமைய தொல்லியல் கள ஆய்வாளர் டாக்டர் பைசல் வழங்கிய…
கடலூர் மாவட்டம் பாலூர் அருகே நரிமேடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கலவரம் அங்கு குவிந்த போலீசார் :
கடலூர் மாவட்டம் பாலூர் அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே நடந்த கலவரம் புது கோவில் கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் வேண்டாம் பழைய கோவில் இருக்கட்டும் என்று சொல்லும் மற்றொரு தரப்பினர். இதை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். காவல் துறைக்கு சென்று புகார் கொடுத்தனர். யாரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினால். அதிகாலையில் கோவில் உள்ளே சென்று பொதுமக்கள் சாமி சிலையை கோவில் வெளியே தூக்கி…
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திருத்தேரை இழுத்து பங்கேற்பு.
செப் 3 கன்னியாகுமரி கோட்டார், ஏழகரம்:அருள்மிகு பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை இழுக்கும் நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். மாதவன், மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ராஜன், 38வது வார்டு வட்டச் செயலாளர் சபரீஷ் ஆகியோர் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று, திருத்தேரின் வடம் தொட்டு இழுத்தனர். பெரும் பக்தி உற்சாகத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப்…
குமரி மாவட்டம் தைக்கா பள்ளி உருஸ் சச்சரவு விவகாரம்!
நாகர்கோவில் : 21 நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு நேற்றைய தினம் குமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாஅத் கொடியேற்ற விழாவின் இரண்டாம் நாளில், பொதுமக்கள் மற்றும் மூன்று நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும், நிர்வாக சொத்துக்களை சூறை ஆடுவதாக குற்றம்சாட்டப்படும் ஷேக் இமாம், செய்யது அஹமது முஸ்தபா என்பவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடையே சிறிய சச்சரவு ஏற்பட்டது. பொதுமக்கள், அந்த நபர்கள் மற்றும் குடும்பத்தினர் பொது சொத்துகளை சூறையாடியதை கண்டித்து எதிர்ப்பு…
கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் :
கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த (28/08/2025) அன்று கார் ஒட்டிகொண்டு சென்றப்போது இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி நிர்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தாராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுதியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ் பி ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.
