இதழ்கள்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூடலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கூடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு இருக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் ஏரியா தலைவர் தோழர் ரபீக் அவர்கள் தலைமை தாங்கினார். ஏரியா செயலாளர் தோழர் நெஃபல் அவர்கள் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் தோழர் இராசி இரவிக்குமார் விளக்க உரையாற்றினார். தோழர் ஹசைன் அவர்கள் கோரிக்கையில் விளக்க கோஷங்களை எழுப்பினார். இதில் தோழர்கள் நிஷாத் , ஷாஜி,மோகன் பி.சி.,யோக சசி,விஷ்ணு தாசன், தங்கராஜ்,தாசன்,அமிர்தகுமாரி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலா பயணிகள் பரவசம்!
குன்னூர், அக்டோபர் 24:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம்–ஊட்டி மலை ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் இயக்கம் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை மொத்தம் 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தண்டவாளங்களில் மரங்கள், பாறைகள் விழுந்ததால் மலை ரெயில் பாதை பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் சேதமடைந்த தண்டவாளங்கள்,…
திருநெல்வேலி மாவட்டத்தில், தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள், அதன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நேரில் வழங்கினார்!
திருநெல்வேலி,அக்.24:-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, இன்று (அக்டோபர்.24)) காலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசனால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 17லட்சத்து,82ஆயிரத்து,773 ரூபாய் ஆகும். மேலும், காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார்…
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்!
திருநெல்வேலி,அக்.24:- ஒன்றிய அரசால், “தேசிய” அளவில், “சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்” ( BEST NSS OFFICER) ஆக, “தேர்வு” செய்யப்பட்டுள்ள, திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் “விவேகானந்தா” கலை- அறிவியல் கல்லூரியின், “நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்” பேராசிரியர் “முனைவர்” ஜெயக்குமாரி அதற்கான விருதினை, “குடியரசுத்தலைவர்” திரௌபதி முர்மு அம்மையாரிடமிருந்து, கடந்த 6-ஆம் தேதி புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டிலிருந்து, இந்த விருதினைப் பெற்றுள்ள…
நீலகிரி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது..
கோத்தகிரி, அக்டோபர் 24:பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோத்தகிரி HRM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. தருமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய A. பி. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார். செயற்குழு உறுப்பினர் இட்டகல் போஜராஜன் முனனிலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மாவட்ட அளவிலான அமைப்பு முன்னேற்றம், வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை, சமூக…
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!
திருநெல்வேலி,அக்.24:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர்.24) காலையில், மாதாந்திர “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இநத கூட்டத்திற்கு தலைமை வகித்த, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) முடிய மொத்தம் 14.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இதே காலத்தில், இம்மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையளவான 30.20 மில்லி மீட்டர் மழையளவை…
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4-மண்டலங்களிலும் திடீர் ஆய்வு!
திருநெல்வேலி, அக்.23:- மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு மண்டல பகுதிகளிலும், பல்வேறு தூய்மை பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் தச்சநல்லூர்ஆகிய மண்டலங்களில், சுகாதார பிரிவு பணியாளர்களும், பொறியியல் பிரிவு பணியாளர்களும் இணைந்து, தூய்மை பணியாளர்களை கொண்டு, கழிவு நீர் ஓடை தூர்வாருதல், மழைநீர் ஓடையில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி, மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், பணிகள் மேற்கொள்ளல்…
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது!மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!
திருநெல்வேலி,அக்.23:-“தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை சம்பந்தமான முன்னேற்பாடு நடவடிக்கைகள், திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக, முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரருகிறது!”-என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், தெரிவித்துள்ளார். ளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள, பேரிடர் மீட்பு சாதனங்கள், தடுப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை, இன்று (அக்டோபர்.23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன்,நேரில்…
கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!
கடலூர் பகுதியை சேர்ந்த (16)வயது சிறுமியும் (21) வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து வாலிபர் சிறுமியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமானர். இந்நிலையில், இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றதால், கடலூர் ஊர் நல அலுவலர் தெய்வானை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்.
விபத்தில் இளைஞர்கள் உயிரிழப்பு; எஸ் பி விசாரணை…
கடலூர் மாவட்டம் புவனாகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் நேற்று சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிதம்பரம் டிஎஸ்பி,செய்தியாதோப்பு டிஎஸ்பி, புவனகிரி போலீசார் உடன் இருந்தனர் கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.
