Headlines

சிலுவத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிக்கான பூமி பூஜை விழா

சிலுவத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிக்கான பூமி பூஜை விழா சிலுவத்தூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடப் பணிக்கான பூமி பூஜை விழா

திண்டுக்கல்: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடனும், கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் அவர்களின் நல்வாழ்த்துகளுடனும், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. K. விக்னேஷ் அவர்களின் வாழ்த்துகளுடனும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

சாணார்பட்டி ஒன்றியம், சிலுவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட காம்பார்ப்பட்டியில் காலை 11:00 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.M. நிர்மல் குமார் (B.A., B.Ed.) தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய ஊரக வளர்ச்சி அலுவலர் திரு. அண்ணாதுரை, அரசுப் பொறியாளர் திரு. விளக்கன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் முன்னிலையில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது.

இவ்விழாவில், திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞரணி, உறுப்பினர் சேர்க்கை அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். மேலும், அனைத்து ஒன்றிய, நகர, கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகளும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள், தோழியர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *