Headlines

பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கல்!

பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கல்! பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கல்!

பழனி அருகே ஆயக்குடியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தீபாவளி பரிசுப் பொருட்கள் – தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கி கௌரவிப்பு!

சேலை, வேட்டி, இனிப்புகள் வழங்கி தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சியில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆயக்குடி பேரூராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சேலை, வேட்டி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை நேரில் வழங்கி, அவர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தினந்தோறும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவர்களின் தீபாவளிப் பண்டிகை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை ஆயக்குடி தமிழக வெற்றிக் கழகப் பொறுப்பாளர் ரஞ்சித் குமார் மணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்ட பிரபு, ஆயக்குடி பேரூராட்சிக் கழகச் செயலாளர் சந்தோஷ் கிருஷ்ணா அரசு வழக்கறிஞர் சரவணன் கிஸ்வத் சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஆயக்குடி பகுதியில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *