Headlines

மாணவர்களை அச்சுறுத்தும் புகையிலை: காரத்தொழுவு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மாணவர்களை அச்சுறுத்தும் புகையிலை: காரத்தொழுவு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாணவர்களை அச்சுறுத்தும் புகையிலை: காரத்தொழுவு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் “புகையிலை ஒரு உயிர் கொல்லி” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்பள்ளியில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மருத்துவ அலுவலர் ராகவேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “புகையிலை ஒரு உயிர் கொல்லி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதனால் உண்டாகும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் இளைய சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதைத் தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த விழிப்புணர்வு முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் பொன்னாண்டவர், ராகுல்ராஜ், ஜெயப்பிரதாப் மற்றும் அரவிந்தன் ஆகியோர் சிறப்புக் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் ஆசிரியர்களும் ஏராளமான மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளியின் போதை தடுப்பு ஒழிப்பு பொறுப்பாசிரியர் செந்தில் குமார் அனைவரையும் நன்றியுடன் அமர்த்தி நன்றி கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *