Headlines

பழனியில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் திரள் ஆர்ப்பாட்டம்: ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை!

பழனியில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் திரள் ஆர்ப்பாட்டம்: ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை! பழனியில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் திரள் ஆர்ப்பாட்டம்: ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை!

பழனி:

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 5-ஆம் தேதி மாநில தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் P. மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்புரையாளர்களாகச் சம்மேளனத் தலைவர் K.R. கணேசன், CITU மாநிலக்குழு உறுப்பினர் சோ. மோகனா, மாவட்டப் பொருளாளர் A. தவக்குமார், மாவட்டத் தலைவர் P. ராமசாமி, மாவட்டத் துணைச்செயலாளர் S.B. மனோகரன் மற்றும் சாலைப் போக்குவரத்துத் தலைவர் K. பிச்சைமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மேலும் பழனி நகராட்சி ஊழியர் அர்ஜுனன், நகராட்சிப் பிரதிநிதி நாச்சிமுத்து உட்படப் பழனி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி, தொப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான உள்ளாட்சித்துறைப் பணியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

முக்கியக் கோரிக்கைகள்:

  • 5 ஆண்டுகள் பணி முடித்த காண்ட்ராக்ட் தூய்மைப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரமாக்க வேண்டும்.
  • ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தூய்மைப் பணியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • காண்ட்ராக்ட் மற்றும் சுயஉதவிக் குழுத் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் பி.எஃப், இ.எஸ்.ஐ பிடித்தத்துடன் சம்பளம் வழங்கிட வேண்டும்.
  • ஆட்சியர் நிர்ணயித்த நாள்கூலி ரூ.690 மற்றும் காலை உணவுப்படி ரூ.100 வழங்க வேண்டும்.
  • உள்ளாட்சிப் பணிகளைத் தனியார் மயமாக்கும் அரசாணைகள் 152, 139, 10 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்த பழனி நகராட்சி அலுவலர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *