Headlines

பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி, ஆக.9: பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பர மேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக ஆவ ணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய ஆயக்குடி யில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கரில் நன்செய், புன் செய் நிலங்கள் உள்ளன.

இதில் புது ஆயக்குடியிலிருந்த குறிப்பிட்ட ஒரு நிலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு அந்த சமுதாயத்தில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு நிலமும் தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட் டுள்ளது. திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணை யர், இந்த நிலத்தை பழனி பத்திரப் பதிவுத் துறைக்கு குறிப்பிட்ட நில அளவீடு எண்ணில் உள்ள இடத்தை தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும், மேற்படி நிலம் கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி அறக்கட்ட ளைக்குச் சொந்தமான நில பிரச்னையில் முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன், இந்தப் பத்திரப் பதிவையும் செய்து கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், பத்திரத்தை தயார் செய்து கொடுத்தது தற்போது சிபிசிஐ டியில் சரணடைந்துள்ள ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜெயபிரகா ஷின் ஜேபி அசோசியேட் என்ற நிறுவனம்தான். சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை ரூ.9 லட்சத்துக்கு கிரை யம் செய்ததாகப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழனி கோயில் நிலத்துக்கு அடுத்தபடியாக நகராட்சிக்குச் சொந் தமான இடத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் ஜஸ்டின் மணி கண்டன் பத்திரப் பதிவு செய்தது வெளியான நிலையில், தற்போது ஆயக்குடி கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான இடத்தையும் முறைகேடாக அவர் பத்திரப் பதிவு செய்து கொடுத் தது தெரியவந்துள்ளது.

பட்டா பெயர் மாற்றப்படாமல் 50 ஆண்டுக ளுக்கு முன்பான போலியான உயில் சாசனம் தயாரிக்கப்பட்டு, முறை கேடாக இந்தப் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. எனவே, இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும், வருவாய்த் துறையும் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மடத்துக்குச் சொந்தமான பிற நிலங்களும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *