5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.”
தமிழ்நாடு வாக்காளர்கள் மொத்தம் – 5.67 கோடி பேர் என வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் – 2.77 கோடி , பெண்கள் – 2.89 கோடி , மூன்றாம் பாலினத்தவர் – 7,617 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும், 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர்கள் அவர்களுக்கு விருப்பமான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேட்பாளர்களின் EVMல் வண்ணப் புகைப்படங்களாக இந்த தேர்தலில் இடம் பெற உள்ளது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ந்தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 04-ந்தேதி நடைபெறும். வேட்புமனு வழங்கும் தொடக்கம் 30.03.2026 வேட்புமனு முடிவடையும் 06.04.2026 அன்று முடிவடையும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
