கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 26 -ல் பயனீர் மில் சாலையில் அமைந்துள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பீளமேடு பகுதி பொறுப்பாளர் A.S.நடராஜ், வட்ட கழக பொறுப்பாளர் மாடசாமி, தகடூர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன்,மாவட்ட பிரதிநிதி பூ.வெ.துரைசாமி, சதிஷ், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ், ரஞ்சித் ,வெங்கடேஷ், கிருஷ்ணன், ஆனந்தி, மற்றும் கோவில் நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர்:சம்பத்குமார்
