Headlines

ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்.

ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரபல சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில், 18-வது ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. அரசு மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பழனி கல்வி மாவட்ட அலுவலர் பரிமளா, பள்ளி தலைமை மேலாளர் ராணி புளோரன்ஸ் மற்றும் தலைமை ஆசிரியை லில்லி கிரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் முத்தாய்ப்பாக, மாணவ-மாணவிகளின் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கை அதிர வைத்தன! சிறுவர்களின் சுழன்றடிக்கும் சிலம்பாட்டம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. வெறும் கலை நிகழ்ச்சிகளோடு நிற்காமல், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அத்தியாவசியமான “பெண்கள் பாதுகாப்பு” மற்றும் பல்வேறு சமுதாய விழிப்புணர்வு நாடகங்களை மாணவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டி, அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினர்.மாணவர்களின் பன்முகத் திறமைகளைக் கண்டு, விழாவில் பங்கேற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் மெய்சிலிர்த்துப் போயினர்!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *