போக்குவரத்து விதிகளை மீறும் த.வெ.க நிர்வாகி, முறையற்ற நிற மாற்றம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம்..!
செப் 25 கன்னியாகுமரி :- கன்னியாகுமரி மாவட்டம் வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வழக்கறிஞர் ரகு, தனது நான்கு சக்கர வாகனத்தை முறையற்ற அனுமதி இன்றி நிற மாற்றம் செய்தும் வாகனம் முழுவதும் கட்சியின் கொடி, வாசகங்கள் மற்றும் கட்சி தலைவர் விஜயின் புகைப்படங்களால் நிரப்பியும் போக்குவரத்து விதிகளுக்கு எதிராக மாற்றி இருப்பது பேசு பொருளாக ஆகி உள்ளது. போக்குவரத்து துறை கண்டும் காணாமல் இருக்கிறதா?பொதுமக்களுக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்புகின்றனர்…
