தமிழ்நாடு
தார் சாலைகளில் வெறும் மண்ணை மட்டும் கொட்டி நிரப்ப அதிகாரம் பெற்ற நெடுஞ்சாலைத்துறையே !
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள சாலைகளின் நிலையானது நம்மை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றது. இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் நெடுஞ்சாலை துறை எடுப்பதாக இல்லை. மாறாக சாலைகளை சரி செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை அதில் உள்ள குழிகளை மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு மட்டும் தான் எங்களது அதிகாரம் உள்ளது., என்கின்ற அளவில் பொறுப்பில்லாமல் அதிகாரிகள் பதிலளிக்கின்றன. கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில்…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே, லெப்பைக்குடியிருப்பு பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை, மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த, சபாநாயகர் அப்பாவு!
அக்.3:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட, பணகுடி அருகே உள்ள “லெப்பை குடியிருப்பு” கிராமத்திற்கு செல்லும் ரெயில்வே பாதையானது, தற்போது புதிதாக சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கப்பாதையை, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவருமான மு. அப்பாவு, இன்று (அக்டோபர். 3) காலையில், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு, அர்ப்பணித்தார். கடந்த ஒரு வருடமாக, இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், இடைவெளியின்றி நடைபெற்று வந்த நிலையில்,…
கன்னியாகுமரி மாவட்டம் – சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி.
அக் 03 கன்னியாகுமரி மணவாளகுறிச்சி பாலம் சந்திப்பில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதியதில் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆட்டோவில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்ததும், மணவை குமரி டிரஸ்ட் சகோதரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…
கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?
சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள் :- விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி, இழப்பீடை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்: பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு. பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்: சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால் உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும்…
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!
திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…
கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர்…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..
அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது..
அக் 02 கன்னியாகுமரி – ஆட்டோ சங்க ஆயுத பூஜை விழா உற்சாகம் நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பி.எம்.சி. மோகன் (கிழக்கு மாவட்ட விவசாய…
திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!
திருநெல்வேலி, அக். 2:-மகாத்மா காந்தியடிகள், திருநெல்வலி டவணில், “தேசபக்தர்” சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன,புனித யாத்திரை நிகழ்வின் போது, 1934 -ஆம் வருடம் ஜனவரிமாதம் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில், காந்தியடிகள் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில், அவர் தங்கியிருந்த அறை புனிதமாக கருதப்பட்டு, இனறும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழா,…
திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
திருநெல்வேலி, அக், 2:- திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை காவல் பிரிவு எதிரே அமைந்துள்ள கதர் அங்காடியில், “தேசப்பிதா” அண்ணல் மகாத்மா காந்தியடிகளின், 157- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, இன்று (அக்டோபர். 2) காலையில், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர், “தீபாவளி” கதர் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,…
