அரசியல்
திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!
திருநெல்வேலி,அக்.28:- திருநெல்வேலி மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளில் நடைபெற்று வரும், “தாமிரபரணி” கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், 423.13 கோடி மதிப்பில், களக்காடு நகராட்சி, பணகுடி, வடக்கு வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, திசையன்விளை, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய, 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், இன்று (அக்டோபர்.28) நெல்லை மாவட்ட ஆட்சியர்…
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்…
உடுமலைஅக்டோபர் 28. உடுமலை அக்.28-உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன் ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் நாயப் சுபேதார்நடராஜ் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலையில் வகித்தார். இதில் சிறப்புஅழைப்பாளராக கர்னல் நாகராஜ், சித்ராநாகராஜ், ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்….
நெல்லை மாநகராட்சியின், நான்கு மண்டலங்களிலும், மொத்தமுள்ள 55 வார்டுகளிலும் நடைபெற்ற, சிறப்பு கூட்டங்கள்! மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி,அக்.28:-தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சேர்த்து, மொத்தம் உள்ள 55 வார்டுகளிலும், மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர்.மோனிகா ராணா அறிவுறுத்தலின் படி, இன்று (அக்டோபர். 28) வார்டு சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, ஆங்காங்கே நடைபெற்ற கூட்ங்களுக்கு, அந்தந்த வார்டுகளின், மாமன்ற உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். திருநெல்வேலி மண்டலம் 25-வது வார்டில், வடக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில்,25-வது வார்டு…
நாகர்கோவில் அரசு அதிகாரிகளின் அநீதி எதிர்ப்பு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
நாகர்கோவில், அக்.28,சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, நாகர்கோவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணியளவில், நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் சிறுபான்மை சமூகத்தவரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் மின்சாரத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டித்தது, கடுமையான சட்ட மீறல் என்றும், இது சிறுபான்மை சமூகத்தை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட தாக்குதலாகும் என்றும் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அல்…
திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
திருநெல்வேலி,அக்.27:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம், இன்று (அகடோபர். 27) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட மக்களிடமிருந்து, “கோரிக்கை” மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைகளுக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்படுவதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், நேரில் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும்…
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது….
“காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும் தொகையை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்!”- எம்.பி.கனிமொழி திருநெல்வேலியில் பேட்டி!
திருநெல்வேலி,அக்.26:- திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திருநெல்வேலி பாளையங் கோட்டையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள, தனியார் மருத்துவமனையினை, இன்று (அக்டோபர். 26) காலையில், திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”காவேரி—டெல்டா மண்டலத்தில், மழை வெள்ள பயிர்ச்சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத் தொகையினை, ஒன்றிய அரசிடமிருந்து, அப்படியே பெற்றுத்தர வேண்டும்!” என்று வலியுறுத்தினார். “தமிழ்நாடு…
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூடலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கூடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு இருக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் ஏரியா தலைவர் தோழர் ரபீக் அவர்கள் தலைமை தாங்கினார். ஏரியா செயலாளர் தோழர் நெஃபல் அவர்கள் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் தோழர் இராசி இரவிக்குமார் விளக்க உரையாற்றினார். தோழர் ஹசைன் அவர்கள் கோரிக்கையில் விளக்க கோஷங்களை எழுப்பினார். இதில் தோழர்கள் நிஷாத் , ஷாஜி,மோகன் பி.சி.,யோக சசி,விஷ்ணு தாசன், தங்கராஜ்,தாசன்,அமிர்தகுமாரி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது..
கோத்தகிரி, அக்டோபர் 24:பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கோத்தகிரி HRM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. தருமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய A. பி. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார். செயற்குழு உறுப்பினர் இட்டகல் போஜராஜன் முனனிலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, மாவட்ட அளவிலான அமைப்பு முன்னேற்றம், வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை, சமூக…
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!
திருநெல்வேலி,அக்.24:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர்.24) காலையில், மாதாந்திர “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இநத கூட்டத்திற்கு தலைமை வகித்த, “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) முடிய மொத்தம் 14.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இதே காலத்தில், இம்மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையளவான 30.20 மில்லி மீட்டர் மழையளவை…
