Headlines

பழனி அருகே ஆயக்குடியில் உள்ள உள்ள குப்பை கிடங்கில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் ஆய்வு…

பழனி அருகே ஆயக்குடியில் உள்ள உள்ள குப்பை கிடங்கில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் ஆய்வு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீரும் தரம் கெட்டுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் பட்டியலின மக்கள் அதிகமாக வாழும் அப்பகுதியில் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தலைமையில் பலமுறை புகார் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவி நேரில் குப்பை கிடங்கை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து குப்பை கிடங்கை மாற்ற தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் குப்பை கிடங்கை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

முன்னதாக இதனைப் பற்றி வாஞ்சிநாதன் தெரிவிக்கையில் விரைவாக இந்த குப்பை கிடங்கை மாற்றி இப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதாரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர் வன்னியரசு அவர்களிடமும் குப்பை கிடங்கு பிரச்சினையை தெரிவித்தோம் .

இதன் அடிப்படையில் இன்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது .

எனவே உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *