கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் (Kodai Road R.S.) பகுதியில் செயல்பட்டு வந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் (POPSK), வரும் 07.08.2026 (வெள்ளிக்கிழமை) முதல் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 07.08.2026 முதல் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளும் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் POPSK-யில் வழங்கப்படும்.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட நேரத்தின்படி 07.08.2026 முதல் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் POPSK-யை அணுகி சேவைகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கு இந்திய அஞ்சல் துறை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
