தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்ட சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்* 1.பேரிச்சம்பழம்2.ஹெல்த் மிக்ஸ் பவுடர்3.முட்டை4.கொண்டைக்கடலை5.பச்சைப்பயிறு6.மணிலா7.மொச்சை பயறு8.அவில் வழங்கும் விழா… இன்று 18-09-2025 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்கள் சுமார் 20 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் அவர்களின் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் முத்துக்குமரன் மருத்துவர் ரஞ்சிதா அவர்கள் நோயாளிகளுக்கு காச நோய் தடுப்பு…
கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் – சிறப்பு சீர்திருத்தம் !
2026 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் திரு ந. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பெற்றுக் கொண்டார்தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்ந ல்லூர் மணக்குலவிநாயகர் மருத்துவ மனையில் உணவு வழங்கினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மணக்குல விநாயகர் மருத்துவ மனையில் சர்க்கரை மற்றும் ரத்தகோதிப்புக்கு உணவு முறையை போது மக்களுக்கு தெளிவு படுத்தி அதற்கு உண்டான உணவை வழங்கினார்கள். இதில் ஏராளமான போது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழுப்புரம் மாவட்ட நிருபர் – அந்தோனிசாமி
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் – ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர்.ராஜப்பா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் அவர்களின் 147 – ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் .
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் தியாகிகள் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் திராவிட இயக்க தோழர்கள் கழகத் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 – பேர் செயின் பறிக்க முயற்சி !
பெண் கீழே விழுந்ததால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம். சம்பவ இடத்தில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.
வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த பெயிண்ட் ரோட்டில் கொட்டி இருந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனை பார்த்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் தலைமை காவலர் ராஜேந்திரன் களத்தில் இறங்கி தனக்கு பணி நேரம் முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் பெயிண்டை அப்புறப்படுத்தி மேலும்…
கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
கடலூரில் ஆ.தி. மு. க, சார்பில் சுதந்திர போராட்ட தியாகி,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில்,மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம். எல். ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செளித்தினர்.பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.
செப் 17 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர், அதன் மாவட்ட செயலாளர் முஜீப் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில், “அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம்” என்ற அமைப்பு, குமரி மாவட்டம் முழுவதும் “இந்து சமய வகுப்பு” என்ற பெயரில் இளம் பிஞ்சுகளின் மனங்களில் மதவெறி, சிறுபான்மையினர் மீது வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில், நாகர்கோவிலின் இருளப்பபுரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபத்தில்,…
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறையில் மருத்துவக் கழிவு கொட்டியதில் பரபரப்பு !
செப் 17 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து அங்குள்ள குடியிருப்புகள் அருகே கொட்டப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த மக்கள், மருத்துவக் கழிவுகளை அப்பகுதியில் அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல்…
