தமிழ்நாடு
மாற்றுதிரனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லாத மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம்வழங்கினார். உடன்,கோவை மாவட்ட துணை மேயர் திரு, வெற்றி செல்வன், அரசு ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
திருப்பூர்: கெட்டுப்போன கேக் விற்பனை – தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஒருமையில் பேசிய பேக்கரி உரிமையாளர்!
திருப்பூர் | மார்ச் 12, 2026 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கெட்டுப்போன தின்பண்டங்களை விற்பனை செய்தது மட்டுமின்றி, அதைச் சுட்டிக்காட்டிய வாடிக்கையாளரிடம் பேக்கரி உரிமையாளர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான தகவல்:மடத்துக்குளம் வட்டம், கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட புதூர்மடம் பேருந்து நிறுத்தம் அருகில் ‘சூர்யா பேக்கரி’ என்ற புதிய கடை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தக் கடைக்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் கேக் வாங்கியுள்ளார். அந்த கேக் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு…
திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…
மதுரையில் ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் நிறுவன சி.எஸ்.ஆர் திட்டம் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ‘பி.எஸ்.எஸ் சொனாட்டா’ மைக்ரோ கிரெடிட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை சி.எஸ்.ஆர் மேனேஜர் பண்டிட் கங்காதர் படேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி பேசுகையில், பி.எஸ்.எஸ் சொனாடா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் சி.எஸ்.ஆர் திட்ட மூலம்…
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் விரட்டி அடித்த வியாபாரிகள்.
மதுரை நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளுக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயின் உத்தரவின் பெயரில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கடைகளை கட்ட சனிக்கிழமை அன்று பூமி பூஜை போடப்பட்டது திங்கள் கிழமை அன்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களும் வந்து வேலையை செய்ய தொடங்கினர் அப்போது திடீரென்று வந்த கட்டடக் கடை வியாபாரிகள் அவர்கள் பணி செய்ய விடாமல்…
அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலை திறப்பு விழா.
தமிழ்நாடு முதலமைச்சர், கோவைக்கு மேலும் அழகு சேர்கும் விதமாக கோவை வ. உ. சி. பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார், விழாவில்கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், இந்நிகழ்வில் திரு. ஜி.டி.கோபால், திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர், மேயர் திருமதி. இரங்கநாயகி இராமச்சந்திரன், துணை மேயர் திரு. வெற்றிசெல்வன், கோவை மாநகராட்சி ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன், மாநில தீர்மானக் குழு செயலாளர்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்று (05.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு,…
கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கல்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி 2026-ல் மீண்டும் தொடர்ந்திட கழகத்தின் இளம் தலைவர், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்ஆசியுடனும், கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைமைக் கழகம் வாய்ப்பளிக்கும் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக விருப்பமனு வழங்கினார் அந்தத் தருணத்தில் வர்த்தகர் அணி…
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…
காடேற்றி கிராம மக்களின் உருக்கமான கோரிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடேற்றி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து சேவை இயக்கப்படாத நிலை நீடித்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ள காடேற்றி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வசதி வழங்கப்படாததால், அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமம் காடேற்றி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தினமும்…
