Headlines

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?

பழனியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்ட வழங்க பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு வழங்க பட்டுள்ளதா என்ற கேள்வி எழும்பி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தற்பொழுது தெரிய வந்த நிலையில் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட நபர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே பட்டா நிலங்கள் வைத்து இருப்பது தற்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல். அந்த ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு போலி ஆவணங்களாக இருப்பின் நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *