Headlines

மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக்குழுக் கூட்டம் (Anti-Drug Club Meeting) இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் தலைமை தாங்கி, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விரிவாக உரை நிகழ்த்தினார்.

மேலும், இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பி வலியுறுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. நாகராஜன், கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *