திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக சண்முக நதி பகுதியில் முடி காணிக்கை மண்டபம் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின்பு புனித நீராடுவதற்காக சண்முக நதியை பயன்படுத்தி வருகின்றனர்..
தொடர்ந்து திருக்கோயில் திருவிழா காலங்களில் உடுமலை பொள்ளாச்சி கோயம்புத்தூர் வால்பாறை ஊட்டி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நடைபாதை பக்தர்கள் சண்முக நதியில் தங்கி முடி காணிக்கை செலுத்தி புனித நீராடி வருகின்றனர்..

இந்நிலையில் சண்முக நதி தற்போது சாக்கடை குளமாக காணப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு நீராடும் பொழுது துணிகளை ஆற்றிலே விட்டு விடுகின்றனர்.
மேலும் மளிகை பொருட்கள் பழங்கள் போன்றவைகளை ஆற்றில் விடுவதால் நதி மாசடைந்து புழுக்கள் நிறைந்து காணப்பட்டு வருகின்றன..
தொடர்ந்து நீரின் தன்மை அசுத்தம் அடைந்து பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயகரமான நிலை காணப்பட்டு வருகின்றன..
தற்போது சண்முக நதியில் நீராடினால் டெங்கு மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்படும் நிலையே காணப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் பழனி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கதிர், ரஞ்சித்குமார் சுப்பிரமணியன், மருது, காஞ்சனா, மற்றும் மீனவர்கள் சார்பாக சுத்தம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து அறநிலைத்துறையும் பொதுப்பணித்துறையும் வருவாய் துறையும் இணைந்து சண்முக நதியில் உள்ள அமலைச் செடிகள், துணிகள் குப்பைகளை சுத்தம் செய்தால் திருவிழா காலங்களில் பக்தர்கள் நீராடுவதற்கும் புனித தீர்த்தங்கள் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
எனவே தற்போது சுத்தம் செய்யும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அரசு துறைகள் சமூகப் பணி செய்ய முன்வர வேண்டும் என பக்தர்கள் வற்புறுத்தி வருகின்றனர்..
