Headlines

பழனி அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றன..

பழனி அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பாலசமுத்திரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் பொது இடங்களில் தூய்மைப் பணிகள் செய்யும் நிகழ்வு நடைபெற்றன.

தொடர்ந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டாகப் பிரித்து கொடுக்கப்பட்டன.

மேலும் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்து கூறும் வகையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரதீப் குமார் மற்றும் பொறுப்பாசிரியர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி சிறப்பித்தனர்..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *