திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.
வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சாரதி என்பவரை கைது…